Tuesday, February 08, 2005

ஓரு சுய பரிசோதனை!

கீழே கொடுக்கப்பட்ட வினாவை மிக கவனமாக படித்து விட்டு, அதற்கான நேர்மையான விடையைக் கூறவும்!

இது நீங்கள் உங்கள் குணாதசியத்தை அறிந்து கொள்ள நிச்சயம் உதவும். நீங்கள் அளிக்கும் விடையைக் கொண்டு உங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இயலும்! இப்போது கேள்விக்கு:

நீங்கள் ஒரு அழகிய நதியோரத்தில் அமைந்த ஒரு சிறு குடிலின் சிறிய கதவை தள்ளிக் கொண்டு அதனுள் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, உங்கள் எதிரே, 7 சிறிய கட்டில்கள் குடிலின் வலதுபுறமாகவும், ஒரு வட்ட மேசையைச் சுற்றி 7 சிறிய நாற்காலிகள் இடதுபுறமாகவும் காணப்படுகின்றன. அந்த மேசையின் நடுவில், ஒரு வட்ட வடிவத் தட்டில், ஐவகை பழங்கள் காணப்படுகின்றன.

அவை யாவன:

a. ஆப்பிள்
b. வாழை
c. சாத்துக்குடி
d. திராட்சை
e. அன்னாசி

நீங்கள் எந்த பழத்தை தேர்ந்தெடுப்பீர்கள்?
உங்கள் நேர்மையான தேர்வு உங்களைப் பற்றி நீங்கள் சரியாக அறிந்து கொள்ள வழி செய்யும்!!!


இத்தேர்வுக்கான முடிவுகளை அடுத்த பதிவில் (நாளை) சொல்கிறேன்!

வலைப்பதிவு நண்பர்கள் தங்கள் பழத்தேர்வை பின்னூட்டத்தில் பதியவும்.


இத்தேர்வுக்கான சரியான விடைகளை முன்பே அறிந்த வலைப்பதிவாளர்களை, சற்று அடக்கி வாசிக்குமாறு விண்ணப்பித்துக் கொள்ளும்

என்றென்றும் அன்புடன்
பாலா

14 மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...

சரி அடக்கியே வாசிக்கிறேன்.. இருந்தாலும் ஒரு சின்ன மேல் விவரம் - இந்த பரிசோதனையைப்போல உண்மையான சுய பரிசோதனை வேறு எதுவும் கிடையாது!

Chandravathanaa said...

நாளை சொல்கிறேன்!

said...

vaazaipazam.
usha

said...

chandravathana,
inRE sollungkaLEn!
enRenRum anbudan
BALA

said...

Suresh,
Thanks for accepting that this "SELF-TEST" is a very good exercise.
enRenRum anbudan
BALA

Suba said...

ஆப்பிள் என்னுடைய சோய்ஸ். ரொம்ப பசின்னா வாழைப்பழமும் சாத்துக்குடியும் கூட பிடிக்கும்.

dondu(#11168674346665545885) said...

எல்லாப் பழங்களும் எனக்குப் பிடிக்கும். எல்லாவற்றையும் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? இருப்பினும் நீங்கள் கேட்பதால் கூறுகிறேன். என் சாய்ஸ் அன்னாசி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Koman Sri Balaji said...

இதில் கொய்யாவையும் சேர்த்திருக்கலாம். எனக்கு அதுதான் பிடிக்கும்.

அபுல் கலாம் ஆசாத் said...

ஏழு சிறிய கட்டில், சிறிய நாற்காலி, சிறிய மேசைன்னா..எதுவுவோ ஸ்னோ வொயிட் கதை சமாச்சாரம் போலத் தெரியுது.

எதுக்கு அதிகம் யோசிக்கணும்.

நமது தேர்வு - சாத்துக்குடி

அன்புடன்
ஆசாத்

said...

entering someone else's house and eating without permission?. thappumma thappu. wait for some time. yaaraavathu vanthavudan, kettuvittu saappidalaam.

Chandravathanaa said...

இந்தக் கேள்வியில் ஏதோ சூட்சுமம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
கட்டில் கதிரை மேசை எல்லாம் "சுந்தரியும் ஏழு சித்திரக்குள்ளர்களும்" கதையை ஞாபகப் படுத்துகிறது.

ஆனாலும் எந்தப் பழத்தை எடுப்பீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளிப்பதானால்..
எல்லாப் பழங்களுமே எனக்குப் பிடிக்கும். இங்கு குறிப்பிட்ட பழங்களில் அன்னாசி எனக்கு அதிகம் பிடித்தது.
வாழைபழம் தினமும் காலையும் மாலையும் தவறாது நான் சாப்பிடுவது.
அப்பிளும் தினமொன்றாவது சாப்பிடுவேன்.
சாத்துக்குடி என்பது தோடம்பழமா..? அதை மதியச் சாப்பாட்டுக்கு மேல் சாப்பிடுவேன்.
ஆனாலும் சுலபமாக உடனே சாப்பிடக் கூடியது திராட்சைதானே.
நான் எடுப்பதாயின் முதலில் திராட்சைப்பழங்களில் ஒன்றை எடுத்து வாய்க்குள் போட்டிருப்பேன்.

said...

பாலா, ஏதாவது வில்லங்கமா சொல்லிடாதீங்க! வாழை பழம் கழுவ வேண்டாம். சுத்தமாய், ஸ்டெர்லைஸ்சுடு பேக்கில் இருப்பதால், தைரியமாய் எடுத்து அப்படியே சாப்பிடலாம். மற்ற பழங்கள் என்றால் கழுவ வேண்டும். சாத்துகுடி போர்! நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதால் உரிப்பது கஷ்டம். வேலையும் அதிகம். அன்னாசி துண்டு போட்டு சாப்பிடுவது பிரம்ம பிரயத்தனம். அதனால் சோம்பேறிகளுக்கு வாழை பழம்தான்
சரி :-))
சீக்கிரம் ரிசல்டை சொல்லுங்க
உஷா

Unknown said...

திராட்சை

enRenRum-anbudan.BALA said...

kani kavi,

2005-ல் நான் கேட்ட கேள்விக்கு 2013-ல் பதில் தந்த தங்களுக்கு நன்றி :)

புதிர் விடை இங்கே:
http://balaji_ammu.blogspot.in/2005/02/blog-post_09.html

இந்த இடுகைக்கான பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கும் :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails